Preity Zinta :வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா.. டயப்பருடன் பகிர்ந்துள்ள போட்டோ !!

Kanmani P   | Asianet News
Published : Dec 08, 2021, 09:17 AM ISTUpdated : Dec 08, 2021, 11:21 AM IST
Preity Zinta :வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா.. டயப்பருடன் பகிர்ந்துள்ள போட்டோ !!

சுருக்கம்

Preity Zinta : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தாயான அனுபவம் குறித்து இன்ஸ்டா பதிவு செய்துள்ளார்.

பாலிவுட் பிரபலமான ப்ரீத்தி ஜிந்தா தில் சே, லக்ஷ்யா, சலாம் நமஸ்தே, கல் ஹோ நா ஹோ, வீர்-ஜாரா மற்றும் தில் சாஹ்தா ஹை போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் .  இவர் கடைசியாக 2018 இல் வெளியான பயாஜி என்னும்  சூப்பர்ஹிட் படத்தில்  நடித்தார். பின்னர்  தொலைக்காட்சி தொடரான Fresh Off The Boat -ல்  சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து மணவாழ்வில் அடியெடுத்து வைத்த இவர் கடந்த பிப்ரவரி 29, 2016 அன்று  Gene Goodenough  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இதன் பின்னர் ப்ரீத்தி ஜிந்தா தம்பதியினர் அமெரிக்கா  லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தரும் ப்ரீத்தி ஜிந்தா தீபாவளி, ஹாலோவீன், கிறிஸ்துமஸ்  போன்ற  விழா கொண்டாட்டத்தின் போது தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து கொள்வார்.

சமீபத்தில் 46 வயதான நடிகை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஜீன் குட்எனஃப்.ஜோடி  தங்களுடைய இரட்டைக் குழந்தைகளான ஜெய் மற்றும் கியா - வாடகைத் தாய் மூலம் பிறந்ததை இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவித்து தங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கான துணி, டைப்பருடன் தனது இனிய நேரம் கழிவதாக Preity Zinta தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்