Shanthnu :பாக்ஸராக மாறிய அதுல்யா..வடிவேலு ஸ்டைலில் குத்து வாங்கும் சாந்தனு ; சூட்டிங் ஸ்பாட் வீடியோ உள்ளே!!!

Published : Dec 08, 2021, 08:56 AM IST
Shanthnu  :பாக்ஸராக மாறிய அதுல்யா..வடிவேலு ஸ்டைலில் குத்து வாங்கும் சாந்தனு ; சூட்டிங் ஸ்பாட் வீடியோ உள்ளே!!!

சுருக்கம்

 Shanthnu : 'முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்றை அதுல்யா ரவி பகிர்ந்துள்ளார். அதில் பாக்ஸர் போல சாந்தனுவை அதுல்யா குத்த, வலிக்காதது  போல சாந்தனு பாவனை செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சாந்தனு  இவர் நடிப்பில் வெளியான கசட தபற திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’. புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற டிசம்பர் 10-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்படத்துக்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்றை சாந்தனு பகிர்ந்துள்ளார். அதில் பாக்ஸர் போல சாந்தனுவை அதுல்யா குத்த வலிக்காதது  போல சாந்தனு பாவனை செய்யும் கட்சி இடம்பெற்றுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?