கொரோனா இருந்தபோதும் நண்பனுக்கு நேரடியாக சாப்பாடு கொண்டுவந்து கொடுத்த விஜய்..! மெர்சல் ஆகிப் போன உயிர் நண்பன்

Kanmani P   | Asianet News
Published : Dec 08, 2021, 07:10 AM ISTUpdated : Dec 08, 2021, 07:12 AM IST
கொரோனா இருந்தபோதும் நண்பனுக்கு நேரடியாக சாப்பாடு கொண்டுவந்து கொடுத்த விஜய்..! மெர்சல் ஆகிப் போன உயிர் நண்பன்

சுருக்கம்

vijay :தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது விஜய் நேரடியாக வந்து சாப்பாடு கொடுத்து சென்றதாக விஜயின் காலேஜ்  நண்பர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். வெளியுலகில் நெருங்க இயலாத பிரபலமாக இருந்தாலும் விஜயின் மறு பக்கம் மிகவும் நெகிழ்ச்சியும் பாசமும் மிக்க பக்கமாகவே இருக்கிறது. அவ்வாறு தற்போது விஜயின் நீண்டகால நண்பர் கொடுத்துள்ள உணர்ச்சி பூர்வ வீடியோதான் தற்போது சென்ம ட்ரெண்டில் இருக்கிறது.

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது. விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார். மாநாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் மூச்சுவிடாத அடுக்கடுக்கான தமிழ் அனைவரையும் ரசிக்க வைத்தது. 

இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல்  போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் சஞ்சீவ் ஏற்கனவே விஜய் பற்றி பெருமிதமாக பேசியிருந்த வீடியோ ஒன்று தற்போது உலா வருகிறது. கடந்த வருட கொரோனா ஊரடங்கின் போது சஞ்சீவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என எண்ணிய சஞ்சீவ் தனது மனைவி, பிள்ளைகளை வெளியில் அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது விஜய் போன் செய்து விசாரிக்க தனத்துக்கு கொரோனா இருக்கலாம் என்றும் வீட்டில் உள்ளவர்களை  வெளியில் தங்க வைத்துள்ளதையும் சஞ்சீவ்  கூறியுள்ளார். இதை கேட்ட விஜய் சாப்பாட்டிற்கு என்ன செய்வாய் என கேட்டுள்ளார். நான் பார்த்துக்கொள்கிறேன் என சஞ்சீவ்  தெரிவித்துள்ளார். ஆனால் சஞ்சீவின் பதிலில் திருப்தி அடையாத விஜய் நேரில் சாப்பாடு கொண்டுவந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனை சஞ்சீவ்  அருகில் வந்து வாங்க மறுக்க சஞ்சீவ்  வீட்டு வாட்ச்மேனிடம் கூறி தனது நண்பனுக்கு சாப்பாடு கொடுக்குமாறு சாப்பாட்டு கேரியரை கொடுத்து சென்றுள்ளார் விஜய்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி