6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய மோதல்... சிவகார்த்திகேயனை சீண்டும் விஜய் சேதுபதி - பரபரப்பாகும் கோலிவுட்

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 9:00 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan), விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோத உள்ளார்களாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘டான்’. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளதாம். 

இதன்மூலம் இவர்கள் இருவரின் படமும் 6 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன. இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு எதிர்நீச்சல் - சூதுகவ்வும் ஆகிய படங்களும், 2016-ம் ஆண்டு ரெமோ - றெக்க ஆகிய படங்களும் ஒரே நாளில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

click me!