Valimai : ‘வலிமை’ ரிலீசுக்காக அஜித் போட்ட மாஸ்டர் பிளான்... ஓகே சொல்வாரா ஸ்டாலின்?

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 7:37 PM IST
Highlights

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. வலிமை படத்தை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். குறிப்பாக இப்படத்திற்காக தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அதிகாலை 1 மணிக்கு திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். 

அப்படி அனுமதி கிடைத்தால், அன்றைய தினம் அதிக ஷோக்கள் திரையிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் முதல் நாளிலேயே பெருமளவு வசூல் ஈட்ட முடியும். ஆனால் இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!