Nayanthara new movie : அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறதுக்கு முன்னாடியே லீக் ஆயிடுச்சே... ஷாக் ஆன நயன்தாரா

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 6:48 PM IST
Highlights

தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘O2’ என பெயரிட்டுள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். மனிதன் உயிர்வாழ தேவையானது ஆக்ஸிஜன். அதன் பெயரில் இப்படம் உருவாகி வருவதால் நிச்சயம் முக்கியமான விஷயம் படத்தில் பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!