தீராத கலை தாகம்.. ஐசியூ-வில் படுத்த படுக்கையாக இருந்தபோதும் படத்துக்கு கதை எழுதினேன் - கலங்க வைத்த வசந்த பாலன்

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 5:52 PM IST
Highlights

ஜெயில் (Jail Movie) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் (vasantha balan), தனக்கு கொரோனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்தார்.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணநிதி நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் வசந்தபாலன், தனக்கு கொரோனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்தார்.

அவர் பேசியதாவது: “கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன் என்னை மருத்துவமனையில் ஐசியூ அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அப்போது எப்படியாவது நாம் இதிலிருந்து மீண்டு வந்துருவோம்னு எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. 

சிகிச்சை பெற்ற நிலையிலும் நான் எழுதிக்கொண்டே தான் இருந்தேன். ஒரு கையில் மருந்து ஏறிக்கொண்டிருக்கும். மற்றொரு பக்கம் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். இந்தக் கலை தான் என்னை கொரோனாவில் இருந்து விடுதலை செய்து மீண்டும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது” என்றார்

மேலும் ஜெயில் படம் குறித்து பேசுகையில், “சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர். பகுதியை பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையை, படித்தபோதுதான் இந்தப் படத்தை எடுக்க ஐடியா வந்தது. இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சனை சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் ஒன்று” என்று வசந்த பாலன் கூறினார்.

click me!