Nayanthara : ‘ராக்கி’யால் நிகழ்ந்த மாற்றம்... காதலர் தினத்தை டார்கெட் செய்யும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 4:13 PM IST
Highlights

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்துள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் விக்னேஷ் சிவன். சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பிரபலமான இவர், தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை காதலித்து வருகிறார். 

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘ராக்கி’ படம் ரிலீசாக உள்ளதால், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் எனக்கருதிய படக்குழு, இப்படத்தின் வெளியீட்டை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

click me!