சினிமாவில், எந்த அளவுக்கு காமெடி, செண்டிமெண்ட், காதல், டான்ஸ் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு சண்டை காட்சிகளுக்கும் பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி பட்ட சண்டை காட்சிகளின் அமைப்பாளரான ஜாகுவார் தங்கம், பாமக கட்சி அன்புமணி ராமதாஸ் ஒருவேளை சினிமாவில் நடிக்க வந்திருந்தால் அவர் தான் சிஎம் என செம்ம பில்டப் கொடுத்து பேசியுள்ளார்.
சினிமாவில், எந்த அளவுக்கு காமெடி, செண்டிமெண்ட், காதல், டான்ஸ் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு சண்டை காட்சிகளுக்கும் பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி பட்ட சண்டை காட்சிகளின் அமைப்பாளரான ஜாகுவார் தங்கம், பாமக கட்சி அன்புமணி ராமதாஸ் ஒருவேளை சினிமாவில் நடிக்க வந்திருந்தால் அவர் தான் சிஎம் என செம்ம பில்டப் கொடுத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து ஜாகுவார் தங்கம் பேசுகையில்... ஒருமுறை, அன்புமணி அவர்களை சந்தித்த போது, தாமிரபரணி ஆற்றை பற்றி எனக்கு இருந்த சந்தேகத்தை கேட்டேன். உடனே அவர் எனக்கு தெரியாத பல தகவல்களை கூறி வியக்க வைத்தார் . நானும் தாமிரபரணி மண்ணில் பிறந்தவன்... தூத்துக்குடியில் வளர்ந்தவன், ஆனால் எனக்கு தெரியாத பல விஷயங்களை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். எனவே இந்த நாட்டை ஆளும் ஆளுமை அவரிடம் உள்ளது எனக்கு புரிந்தது.
அதே போல் நான் 20 வருடங்களுக்கு முன் ஒரு தயாரிப்பாளராக இருந்திருந்தால்... கண்டிப்பாக சின்னையா (அன்புமணியை) வைத்து ஒரு படம் எடுத்திருப்பேன். அவர் திரையுலகில் நடிக்க வந்திருந்தால் இந்நேரம் முதலமைச்சராக ஆகி இருப்பார் என படு பில்டப் செய்து பேசியுள்ளார். நடிகர்கள் சிலர் மேக்கப் போட்டால் தான் அழகு என்றும், ஆனால் அப்படி எந்த ஒரு மேக்கப்பும் போடாமலேயே.. சின்னையா அழகு. அவர் திரைப்படங்களில் நடிக்க வராததற்கு பெரியய்யா திட்டுவார் என்கிற காரணமாக தான் இருக்கும் என வரிந்து கட்டி பேசியுள்ளார் ஜாகுவார் தங்கம்.
இவர் பேசி இருப்பதை பார்த்தால்... ஒருவேளை அன்புமணி அவர்கள் நடிக்க வந்திருந்தால் ரஜினி - கமல் போன்றவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்திருப்பார் என்பது போல் தெரிகிறது. அதே நேரம் சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள் அனைவருமே... அரசியலில் ஜொலித்தது இல்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகம் என பெயர் எடுத்த சிவாஜி கணேசனும் அரசியலில் இறங்கி அடிபட்டவரே... அதே போல் ரஜினி, அரசியல் வருகை குறித்து அறிவித்து, பின்னர் அரசியலே வேண்டாம் என ஒதுங்கியவர்.
நடிகர் கமல் ஹாசனோ, அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறி தற்போது 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை துவங்கி தன்னுடைய கட்சியை நிலை நிறுத்த போராடி வருகிறார். ஒருவேளை சினிமாவில் நுழைந்து அதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் அரசியல் தலைவராக அன்புமணி உயர்த்திருப்பார் என்று கற்பனையோடு ஜாகுவார் தங்கம் பேசி இருந்தாலும் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது விடை தெரியாத கேள்வி தான்.