Vicky Katrina Marriage: பட்டு புடவையில் குத்தாட்டம் போடும் கத்ரீனா... வைரலாகி வருவது மெஹந்தி புகைப்படங்களா?

Published : Dec 07, 2021, 06:35 PM ISTUpdated : Dec 07, 2021, 06:36 PM IST
Vicky Katrina Marriage: பட்டு புடவையில் குத்தாட்டம் போடும் கத்ரீனா... வைரலாகி வருவது மெஹந்தி புகைப்படங்களா?

சுருக்கம்

கத்ரீனா கைஃபின் (Katrina kaif) மெஹந்தி புகைப்படங்கள் என சில போட்டோஸ், சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் கத்ரீனா பனாரசி சேலையில் கையில் மெஹந்தி போட்டு கொண்டு, பூரித்த புன்னகையோடு நடனம் ஆடுகிறார்.  

கத்ரீனா கைஃபின் மெஹந்தி புகைப்படங்கள் என சில போட்டோஸ், சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் கத்ரீனா பனாரசி சேலையில் கையில் மெஹந்தி போட்டு கொண்டு, பூரித்த புன்னகையோடு நடனம் ஆடுகிறார்.

பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமண கொண்டாட்டங்கள் டிசம்பர் 7ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகிறது. எனவே மணமக்கள், நேற்றைய தினமே தங்கள் குடும்பத்தினருடன் சவாய் மாதோபூருக்கு சென்றனர். இன்று அவரது நண்பர்கள் மற்றும் நண்பர்கள் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Katrina: திருமணத்திற்கு அழைக்காத முன்னாள் காதலி கத்ரீனாவுக்காக சல்மான் கான் செய்த செயல்! பெரிய மனசு வேண்டும்!

 

இதற்கிடையில், கத்ரீனா கைஃப்பின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் என சமூக ஊடகங்களில்  சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள வரும் யாருக்கும் புகைப்படங்கள், மற்றும் கேமராக்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் கத்ரீனாவின் மெஹந்தி புகைப்படங்கள் எப்படி வெளியானது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Samantha: 'மனம் நொந்து இறந்து விடுவேன்' என நினைத்தேன்.! பகீர் கிளப்பிய சமந்தா அவரே கூறிய அதிர்ச்சி காரணம்?

ஆனால் இது உண்மையில் கத்ரீனா கைஃபின் மெஹந்தி புகைப்படங்கள் அல்ல என்றும், மாறாக விளம்பர படப்பிடிப்பு ஒன்றிக்கு எடுக்கப்பட்டது என்றும், இதனை  மெஹந்தி படங்களை கூறி நெட்டிசன்கள்  வைரலாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த படங்களில், கை நிறைய மெஹந்தியோடு பூரித்த புன்னகையோடு இருக்கிறார். அவர் பச்சை கிளி நிறத்தில் பனாரசி சேலை அணிந்துள்ளார். லூஸ் ஹேரில்,  பாரம்பரிய நகை அணிந்து வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார்.

கத்ரீனா - விக்கி கௌஷாலின் சங்கீத்  விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் இன்று சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் இசை நிகழ்ச்சிகளோடு, சங்கீத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: ஓடிடி-யில் மாஸ் காட்டிய சூர்யாவின் 'சூரரை போற்று' திரையரங்கில் வெளியாகிறது! செம்ம குஷியில் ரசிகர்கள்!

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள விஐபி விருந்தினர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 120 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், விஐபி விருந்தினர்கள்,  சொகுசு கூடாரங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மிகவும் ஆடம்பரமான அனைத்து விதமான உணவுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!