Dhanush : அம்மாடியோவ்வ்... எத்தனை கமிட்மென்ட்.... ஹாலிவுட் படப்பிடிப்பை முடிக்க அமெரிக்கா பறந்த தனுஷ்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 08, 2021, 07:52 AM IST
Dhanush : அம்மாடியோவ்வ்... எத்தனை கமிட்மென்ட்....  ஹாலிவுட் படப்பிடிப்பை முடிக்க அமெரிக்கா பறந்த தனுஷ்!!

சுருக்கம்

Dhanush : தனுஷ் நடிக்கும்  ஹாலிவுட் திரைப்படமான   "Gray Man" படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர்  தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில்,  'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார், மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. 

நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெறுகிறார். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, கொரோனா இரண்டாவது அலை தலை தூக்குவதற்கு முன்னரே, கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா பறந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில சின்ன காட்சிகளை படமாக்குவதற்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். தற்போது "Gray Man" படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும்  இவர் தற்போது நடித்துள்ள பாலிவுட் படமான "Atrangi Re" ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 - ம் தேதி "Atrangi Re" வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லவுள்ளார் எனவும், இதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கமிட் ஆகியுள்ள நானே வருவேன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்  என சொல்லப்படுகிறது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!