மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ்

Published : Nov 03, 2022, 12:21 PM IST
மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ்

சுருக்கம்

மோடி - விஷால் இடையேயான டுவ்ட்டர் உரையாடலை பிரபல வில்லன் நடிகரும், இயக்குனருமான பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார். 

நடிகர் விஷால், சினிமாவில் தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வருகிறார். இரும்புத்திரை படத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. இருப்பினும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஷால் கைவசம் லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் உள்ளன.

இதில் லத்தி படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்திலும் விஷாலை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்...  தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டதால் அதிரடியாக OTT ரிலீஸ் தேதியை அறிவித்த பிரின்ஸ் படக்குழு - எப்போ ரிலீஸ்?

இதனிடையே சமீபத்தில் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், தான் காசிக்கு சென்றபோது சிறப்பான தரிசனம் கிடைத்ததாகவும், காசியை இந்த அளவுக்கு அழகாக மாற்றியதற்கு நன்றி என குறிப்பிட்டு பிரதமர் மோடியையும் டேக் செய்திருந்தார். இதற்கு பிரதமர் மோடியும் ரிப்ளை செய்திருந்தார். அதில் தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

மோடி - விஷால் இடையேயான இந்த உரையாடலை பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார். விஷாலின் டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு “shot ok... next" என கேட்டுள்ளார். இதன்மூலம் இருவரும் சிறப்பாக நடிப்பதாக கிண்டலடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். அவரின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இதற்கு விஷால் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் மாஸான போஸ்டர் உடன் வாரிசு பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்