என் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்து கோஷமிட்டு நெகிழவைத்த பிரபு

By Ganesh A  |  First Published Dec 29, 2023, 11:54 AM IST

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு, கேப்டன்... கேப்டன் என கோஷமிட்டதால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.


நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலைகடலென திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

விஜயகாந்தின் உடல் இன்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் 1.30 மணி வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் விஜயகாந்த் உடலுக்கு தனது குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறியதாவது : “என் தந்தை சிவாஜி கணேசன் இறந்த போது நான் ஊரில் இல்லை. அப்போது மகனாக இருந்துப் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் முன் நின்று செய்தார் விஜயகாந்த். என் தந்தை சிவாஜிக்கு அவரும் ஒரு பிள்ளை தான்.

அதனால் தான் என் அண்ணன் விஜயகாந்துக்கு நான் குடும்பத்தோடு வந்து அஞ்சலி செலுத்தி உள்ளேன். தமிழ் மக்கள் மற்றும் திரையுலகம் என எல்லா இடத்திலும் அவரை பிடித்தவர்கள் மனதில் என் அருமை நண்பர் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என கூறிவிட்டு கேப்டன்.. கேப்டன் என்று பிரபு கோஷமிட்டதை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கிப் போயினர்.

இதையும் படியுங்கள்... நடிகர் திலகத்தின் செல்லப்பிள்ளை... சிவாஜி மறைவின் போது தெருவில் இறங்கி விஜயகாந்த் செய்த தரமான சம்பவம் - வீடியோ

click me!