Captain Vijayakanth New House : பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே சுகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் அவருக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து பார்த்து, ஆசையாய் கட்டி வந்த தனது வீட்டில் குடியேறாமலேயே இந்த மண்ணை விட்டு மறைந்துள்ளார் விஜயகாந்த் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் உள்ளது தான் அட் கோ நகர்.
இங்கு கடந்த 2010 வீடு ஒன்றை கட்ட ஆசைப்பட்டு, அதற்கான பணிகளை கடந்த 2013 ஆம் ஆண்டு துவங்கியுள்ளார் விஜயகாந்த். சுமார் 20,000 சதுர அடியில் கட்டப்படவிருந்த அந்த பிரம்மாண்ட வீட்டிற்கு அதே 2013 ஆம் ஆண்டு பூஜையும் போடப்பட்டது. கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சில தீடீர் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளார் விஜயகாந்த்.
அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அந்த வீடு தொடர்ந்து கட்டப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வீடு கட்டும் பணிகள் தீவிரம் அடைந்தது. வீட்டு வேலைகள் சுமார் 90 சதவீதம் முடிந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது என்றும், ஆனால் உடல்நல குறைவு காரணமாக அதில் விஜயகாந்த் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
undefined
விஜயகாந்துக்கு செய்வினை வைக்கப்பட்டதா? கேப்டனின் மரணத்தில் சந்தேகம்... பகீர் கிளப்பிய கங்கை அமரன்
தற்பொழுது காட்டுப்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த புதிய வீட்டில் வைத்து தான் தனது மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடத்த கேப்டன் ஆசையோடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பார்த்து பார்த்து, 10 ஆண்டுகளாக மிகுந்த ஆசையோடு கட்டிய வீட்டில் ஒரு நாள் கூட வாழாமல் இந்த மண்ணை விட்டு அவர் மறைந்துள்ளது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவருடைய நினைவாக விரைவில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மனைவி பிரேமலதாவும், அவருடைய இரண்டு மகன்களும் அந்த வீட்டில் குடியேற உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.