மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!

By Raghupati RFirst Published Feb 4, 2023, 5:32 PM IST
Highlights

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் (வயது 78) சென்னையில் இன்று காலமானார்.

78 வயதாகும் வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் தான் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அந்த செய்தி வந்து முடிவதற்குள் வாணி ஜெயராம் மறைந்துவிட்டார். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வாணி ஜெயராம் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காலி ௭ன இந்திய மொழிகள் பலவற்றிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இன்று காலை 11 மணியளவில் வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மலர் என்பவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பணிப்பெண் மலர் என்பவர் மயிலாப்பூரில் உள்ள வாணி ஜெயராமின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது வாணி ஜெயராம் படுக்கையில் இருந்து கீழே விழுந்து கண்ணாடி டேபிளில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.  இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக  விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன்.

அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான திருமதி வாணிஜெயராம் அவர்களின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி வாணிஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாடகி வாணி ஜெயராம் பத்ம விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். pic.twitter.com/nqxHzruOIB

— PIB in Tamil Nadu (@pibchennai)

இந்த நிலையில் பாடகி வாணி ஜெயராம் கடைசி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த வருடம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது மிக மிக சந்தோஷம் அடைந்தேன். 52 வருடங்களாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமா இருக்கு.

இதுவரைக்கு என்னுடைய பாடல்களை கேட்டு ரசித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த விருதை அளித்து என்னை கௌரவப்படுத்திய மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியையும் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..AIADMK: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!

click me!