வாணி ஜெயராம் தனது கணவரை இழந்த பின்னர் வாழ தெம்பு இல்லை என்று வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் மூலம் ரசிகர்களை கட்டி வைத்தவர் பிரபல பாடகி வாணி ஜெயராம். ஒரு காலத்தில் பி. சுசீலா கொடி கட்டிப் பறந்த போதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்தவர் வாணி ஜெயராம்.
திரையுலகில் பிரபலமானவராக இருந்தாலும் கணவர் ஜெயராம் இல்லாமல் ஒரு நாளும் வாணி ஜெயராம் வெளியே செல்ல மாட்டார். அவர்களது அன்பைப் பார்த்து வியந்தவர்கள் ஏராளம். அன்யோன்யமாக இருந்த இவர்களது வாழ்க்கையில் 2018 ஆம் ஆண்டு அந்த சோகம் நடந்தது.
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்!
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது கணவரை இழந்தார் வாணி ஜெயராம்.
கணவரின் மரணத்திற்குப் பின்னர் பேட்டியளித்து இருந்த வாணி ஜெயராம், ''கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ ர் கஷ்டப்படுகிறேன். அவர் இல்லாத உலகில் வாழ எனக்கு தெம்பு இல்லை'' என்று குறிப்பிட்டு இருந்தார். கணவரை இழந்த வாணி ஜெயராம் தனியாகவே சென்னையில் வசித்து வந்தார்.
BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!