BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!

By manimegalai aFirst Published Feb 4, 2023, 2:50 PM IST
Highlights

பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம், (78) சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் காலமானார்.

வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரின் உண்மையான பெயர்கலைவாணி . இந்த பெயர் வைத்ததால் என்னவோ... அந்த கலைவாணியை இவரின் நாவில் குடிகொண்டு, பல பாடல்களை பாட செய்தார். இவர் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், சங்கீதம் கற்று கொள்ளும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இவரது பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர்.  

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு கவிஞர் வாலியின் வரிகளில் எழுதப்பட்ட 'மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்' என துவங்கும் பாடலை தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்திற்காக பாடினார் வாணி ஜெயராம்.  ம. சு. விசுவநாதன் இசையில் வெளியான இந்த பாடல், அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட பாடலாக அமைந்தது மட்டும் இன்றி, இந்த பாடலை பாடிய பாடகி யார் என, தமிழ் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர்கள், மற்றும் இயக்குனரை தேட வைத்தது.  பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.

Vani Jayaram Songs: ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்!

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் 10,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

Vani Jayaram: கணவரை இழந்த பின்னர் வாழ தெம்பு இல்லை என்று கூறியவர் வாணி ஜெயராம்!

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை 19 மொழிகளில் பாடியுள்ள இவர், இந்தண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசின் பத்மபூஷன் விருதுதையும் பெற்றார். இந்நிலையில் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் திடீர் கரணம் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாணி ஜெயராம் பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வந்தார். பின்னர் பாடல்களில் முழு கவனம் செலுத்துவதற்காக அந்த வேலையை துறந்தார். 

click me!