ஓணம் பண்டிகையை முன்னிட்டு, துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் சவுத், இந்த ஆண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது.
முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அபிலாஷ். என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த பிரமாண்ட பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார். தீபக் பரமேஷ்வர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.
இதை கவனித்தீர்களா? பக்கா ஸ்கெச் போட்டு... 'லியோ' படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்!