இது தான் சங்கதியா? ஓவர் சந்தோஷத்தில்... குட்டை உடையில் குத்தாட்டம் போட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்! வீடியோ

Published : Feb 03, 2023, 08:22 PM IST
இது தான் சங்கதியா? ஓவர் சந்தோஷத்தில்... குட்டை உடையில் குத்தாட்டம் போட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்! வீடியோ

சுருக்கம்

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் 'போடா போடி'  படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் கொடுத்தவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே, சில சூப்பர் ஹிட் பட வாய்ப்புகள் கிடைத்த போதும், அதனை அவர் தன்னுடைய தந்தையின் கோரிக்கைக்காக நிராகரித்து விட்டார்.

இவர் தவற விட்ட படங்களில் முக்கியமானது என்றால், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ், பரத் நடித்த காதல், மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா ஆகிய படங்கள். ஆனால் கடந்த 2008 ஆன் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய கதை மிகவும் பிடித்து போனதாலும், தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்துபடியான படம் என்பதாலும், இப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமி சரத்குமாருக்கு மற்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதை கவனித்தீர்களா? பக்கா ஸ்கெச் போட்டு... 'லியோ' படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்!

பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து கதாநாயகி கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காத வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த விக்ரம் வேதா, நிமுணன் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதை போல் சில படங்களில் வில்லியாகவும் சமீப காலமாக நடித்து மிரட்டி வருகிறார். குறிப்பாக சர்க்கார், சண்டை கோழி போன்ற படங்களில் பர்பாமெஸில் பட்டையை கிளப்பினார்.

தளபதி 67 படத்தில் இணைந்த ஏஜென்ட் டீனா..! திறமைக்காக வாய்ப்பை வாரி வழங்கிய லோகேஷ் கனகராஜ்..!

குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவா இருப்பவர். அந்த வகையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் பதிவுகளுக்கு பல ஃபாலோபஸ் உள்ளனர். தற்போது இவருக்கு instagram-யில் இரண்டு மில்லியன் ஃபாலோவர்ஸ் வந்ததை, ஃபாலோவஸ்க்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டும் வீடியோவை வெளியிட அவை வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராய்யின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!