மூத்த பின்னணி பாடகியான வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.
பிறப்பிலேயே இவர் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வேலூரில் பிறந்த இவரது பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். இவர், ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார். மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற தமிழ் பாடலை பாடி தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி நாட்டுப்புற பாடல்கள், பாப், கஜல், பஜனை பாடல்களையும் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, குஜராத் மாநில விருதுகளை பெற்றிருக்கிறார்.
கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்த கலைவாணியின் இசைப் பயணம் குட்டி என்ற ஹிந்தி படத்தின் மூலமாக ஆரம்பமாகியுள்ளது. அதன் பிறகு கிட்டத்தட்ட 4 தலைமுறைகளாக பாடல்கள் பாடியுள்ளார். சினிமாவைத் தவிர கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களை பாடியிருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!
கணவரை இழந்த பின்னர் வாழ தெம்பு இல்லை என்று கூறியவர் வாணி ஜெயராம்!
தேசிய விருதுகள்:
1975 – தேசிய விருது – அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சில பாடல்கள்
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சங்கராபரணம் படத்தில் சில பாடல்கள்
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" - சுவாதி கிரணம்
2023 - பத்ம பூசண் விருது, இந்திய அரசு
மாநில அரசு விருது:
1972 - சிறந்த பாடகிக்கான குஜராத் மாநில திரைப்பட விருது
1979 - சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
1979 - சிறந்த பாடகிக்கான நந்தி விருது
1982 - சிறந்த பாடகிக்கான ஒடிசா மாநில திரைப்பட விருது
இவை தவிர பிற விருதுகள் வாங்கியுள்ளார்.
வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்:
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். இது தவிர, பஜனை, நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.