உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினர்.
உலக அளவில் நீண்ட கால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மே-28 ஆம் தேதி ஆன இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் திட்டத்தை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இதனை அனுசரிக்கும் வகையில் இன்று நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணிப் போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற போன்ற மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் உணவு வழங்கினர்.
விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி! அழகு போட்டோஸ்!
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி சார்பாக ஒரு நாள் மதிய உணவு வழங்கும் திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக கோவை அரசு மருத்துவமனை முன்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில்,மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதே போல் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர்.
அடேங்கப்பா ஓப்பன் நெக்? கழண்டு விழுந்துட போகுது... டாப் ஆங்கிளில் தாறுமாறு பண்ணும் கீர்த்தி சுரேஷ்!
புதுச்சேரியில் உள்ள 28 தொகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள் வழங்கினார்கள். விஜய் ரசிகர்கள் செயல்களுக்கு ஏழை - எளிய அனைவருமே தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.