Pooja hegde video: பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவை பொது இடத்தில் தொல்லை செய்த நபர்...வைரல் வீடியோ..!

By Anu Kan  |  First Published Mar 28, 2022, 8:41 AM IST

Pooja hegde video: பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவை பொது இடத்தில் தொல்லை செய்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவை பொது இடத்தில் தொல்லை செய்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மிஷ்கினின் முகமூடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு, சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே:

ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா ஹெக்டே தற்போது, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவர், தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

 பீஸ்ட் அப்டேட்:

நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில்,  நடிகர் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதன் பின்னணி  பணிகள் விரைவாக நடைபெறுவதால், படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுவரை, பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், குறிப்பாக விஜய்,  பூஜா ஹெக்டே நடத்தில் வெளியான ''அரபிக் குத்து பாடல், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதில், பூஜா ஹெக்டேவின் டான்ஸ் மற்றும் லுக் பாப்புலர் ஆகி விட்டது.  பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே வைரல் வீடியோ:

 இந்நிலையில், பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் செலுத்தும், பூஜா ஹெக்டே. தன்னுடைய பிட்னெஸ் வேலைகளை முடித்து விட்டு, ஜிம்மில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் பூஜாவை அணுகி செல்பி எடுக்க முற்படுகிறார். பூஜா ஹெக்டே  மறுப்பு சொல்லாமல் அந்த நபருடன் செல்பி எடுத்து கொள்கிறார். 

 மேலும் படிக்க...KGF -2: கே.ஜி.எஃப் 2...விஜய்யின் பீஸ்ட்டுக்கு போட்டியா..? இது சினிமா...தேர்தல் இல்லை! KGF ஹீரோ ஆவேச பேச்சு!

பின்னர், பூஜா சென்றுவிட அந்த நபர் விடாமல் மேலும் செல்பி வேண்டும் என கேட்டு தொல்லை செய்து இருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த மீடியா நபர்கள் அந்த நபரை வெளியேற சொல்லி சத்தம் போட்டதால், அவர் அந்த இடத்தை விட்டு கிளம்பி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

click me!