Oscars 2022 : 7-வது முறையாக ஆஸ்கர் விருது வென்று கெத்து காட்டும் இந்தியர்... யார் இந்த நமித் மல்கோத்ரா?

By Asianet Tamil cinema  |  First Published Mar 28, 2022, 8:13 AM IST

Oscars 2022 : கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


ஆஸ்கர் விருது விழா

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவாகும். அந்த வகையில் 94-வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த விருது விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த முறை டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த படம் இதுவரை சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

இந்தியருக்கு விருது

இப்படத்துக்காக இந்தியர் ஒருவரும் விருது வாங்கி உள்ளார். அவர் பெயர் நமித் மல்கோத்ரா. இவர் டியூன் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இவரது நிறுவனம் வாங்கும் 7-வது ஆஸ்கர் விருது இதுவாகும். 

இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திலும் பணியாற்றி உள்ளார். மேலும் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்துக்கும் இவரது நிறுவனம் தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் இவரது நிறுவனம் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... KGF -2: கே.ஜி.எஃப் 2...விஜய்யின் பீஸ்ட்டுக்கு போட்டியா..? இது சினிமா...தேர்தல் இல்லை! KGF ஹீரோ ஆவேச பேச்சு!

click me!