ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் லான்ச் லைவ்

By Kanmani P  |  First Published Aug 19, 2022, 6:07 PM IST

ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் லாஞ்ச் லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது. 


மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம், பிரபு, ஜெயராமன், பிரகாஷ்ராஜ், ரகுமான், பார்த்திபன் என நட்சத்திர பட்டாளங்கள் குழுமி உள்ளன.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த படத்திற்கான ஒளிப்பதிவை ரவிவர்மன், படத்தொகுப்பை  ஏ. ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகின்றனர். இதற்கான கலை வடிவத்தை பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அமைத்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம்  சோழர்களின் வரலாறான பொன்னியின் செல்வன் நாவலை தழுவியதாகும்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக நடைபெற்ற இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். திடீர் உடல்நல குறைவு காரணமாக விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே படத்தின் முதல் சிங்களாக பொன்னியின் நதி பாடல் வெளியாகியிருந்தது. இதில் கார்த்தி இடம் பெற்று இருந்தார்.

பொன்னியின் செல்வனில் வல்லவராயன் வந்திய தேவனாக கார்த்தி நடிக்கிறார். அதேபோல அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி அதாவது ராஜராஜ சோழனாக நடிக்கிறார். இதில் முக்கிய  ரோலில் நடிப்பவர் விக்ரம் தான் ஆதித்ய கரிகாலனாக வருகிறார். சுந்தர சோழனின் மூத்த மகனான இவர் மற்ற நாடுகளுடன் போரிடுவதற்காக தன் முடியை துரக்கிறார். பின்னரே அருள்மொழிவர்மன் அரசவையை ஏற்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...வர வர உடையை குறைக்கும் பிரியா பவானி..வெளிநாட்டில் ஹாட் பரப்பும் நாயகி

இதில் குந்தவையாக த்ரிஷா நடிக்கிறார். முன்னதாக வெளியான விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்  உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எழுப்பிய நிலையில் டீசர் வெளியாகி மேலும் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

இந்நிலையில் ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் லாஞ்ச் லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...20 கோடி வரை சம்பளம்...ஆனால் ஒரு நாள் கூட்டத்தை கூட கூட்ட துப்பிள்ளை..நடிகர்களை வாரிய சுந்தர் சி

 

click me!