படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் ஒன்றாகும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான மணிரத்தினத்தின் கனவுப்படமான இந்த படம் சோழ மன்னர்களின் வரலாறான பொன்னியின் செல்வன் நாவலை தழுவியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள படத்தின் முதல் சிங்கிளாக பொன்னியின் நதி பாடல் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சோழ சோழன் என்னும் பாடல் இன்று வெளியாக உள்ளது. இதற்கான புரோமோ முன்னதாக வெளியாகி அதிக வைரலாகியது.
மேலும் செய்திகளுக்கு...வர வர உடையை குறைக்கும் பிரியா பவானி..வெளிநாட்டில் ஹாட் பரப்பும் நாயகி
மெட்ராஸ் டாக்கீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தில் முதல் சிங்களுக்கான சென்னையில் நடந்த விழாவில் கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அப்பொழுது பேசிய உரைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார் விக்ரம் பிரபு ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ரகுமான் மற்றும் ஆர். பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
20 கோடி வரை சம்பளம்...ஆனால் ஒரு நாள் கூட்டத்தை கூட கூட்ட துப்பிள்ளை..நடிகர்களை வாரிய சுந்தர் சி
இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
& Reached Hyderabad For Second Single Launch Today Evening at 6PM🔥
🚩JRC BallRoom, FilmNagar, Hyderabadpic.twitter.com/dS5BDNcpg5