பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ

By manimegalai a  |  First Published Aug 18, 2022, 6:12 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வெளியான நிலையில், படம் முடிந்த பின்னர் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து தப்பிக்க நடிகையுடன் தனுஷ் ஓடும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 


இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  அனிரூத் இசைமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திரைப்படத்திற்கும் அதே அளவிற்கு ரசிகர்கள் தங்களுடைய வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: 'திருச்சிற்றம்பலம்' படத்தை மகன்களுடன் சேர்ந்து ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ... பார்த்த நடிகர் தனுஷ்!

தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ் இந்த படத்திற்கு வந்து கொண்டிருப்பதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்திற்கு பின்னர் வெளியான ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன் உட்பட அனைத்துமே ஓடிடி தளத்தில் வெளியான நிலையில்... சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்னர் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளதால், தனுஷின் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு கூடி ஆட்டம் - படத்தோடு படத்தை வரவேற்றனர். 

மேலும் செய்திகள்: தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்
 

நடிகர் தனுஷின் தன்னுடைய மகன், அனிரூத், நடிகை ராஷி  கண்ணா மற்றும் படக்குழுவினருடன் ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியாக காலை 8 மணிக்கு திரையிடப்பட்ட 'திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்து ரசித்தார். தனுஷ் மற்றும் படக்குழுவினர் வந்த தகவலை அறிந்து, ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திரைப்படம் முடிந்து காரில் ஏறி செல்ல கூட வழி இல்லாததால், தனுஷ் தன்னுடைய பாதுகாவலர்களுடன் நடிகை ராஷி கண்ணா கைகளை பிடித்து கொண்டு, மிகவும் வேகமாக ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து தப்பித்து காரில் செல்ல ஓடிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகையின் கையை பிடித்து கொண்டு செல்லும் தனுஷ், தன்னுடன் படம் பார்த்த மகனை மறந்து விட்டாரா? என நெட்டிசன்கள் சில கேள்வி எழுப்பியும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ (நன்றி பாலிமர்)
 

திரையரங்கில் திரண்ட ரசிகர்கள்.. தெறித்து ஓடிய நடிகர் தனுஷ்..! pic.twitter.com/s0FH3l3W3x

— Polimer News (@polimernews)

 

 

click me!