ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ணகூடாதா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது டிரைலர்

By Ganesh AFirst Published Aug 19, 2022, 1:00 PM IST
Highlights

Natchathiram Nagargiradhu : நட்சத்திரம் நகர்கிறது படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர் அடுத்ததாக கார்த்தியின் மெட்ராஸ் படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன்படி ரஜினியை வைத்து முதலில் கபாலி படத்தை இயக்கிய பா.இரஞ்சித், பின்னர் அவரை வைத்தே காலா படத்தையும் இயக்கி வெற்றிகண்டார். இதையடுத்து ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய அவர், அப்படத்தின் பாக்ஸிங் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி பேசி பாராட்டுக்களை பெற்றார். இப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இதுதவிர கலையரசன், ஷபீர் உள்பட ஏராளமான இளம் நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகளைப் பற்றி இந்த டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுதவிர தன்பாலின ஈர்ப்பு பற்றியும் இதில் பேசி உள்ளனர். இதன்மூலம் பா.இரஞ்சித்தின் முந்தைய படங்கள் போல் இப்படமும் வெளியான பின் பரபரப்பாக பேசப்படும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... முதல்வர் கையால் சிறந்த விவசாயி விருது... நடிப்பை போல் விவசாயத்திலும் சாதித்து காட்டிய நடிகர் ஜெயராம்

click me!