சோழ புலியாக மாறி கர்ஜிக்கும் விக்ரம்.. வெளியானது 'பொன்னியின் செல்வன் 1' மேக்கிங் டீஸர்!!

By manimegalai a  |  First Published Jul 13, 2022, 5:59 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தில் சோழ நாட்டு புலியான ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரமின் மேக்கிங் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளை இப்போதே துவங்கிவிட்டது படக்குழு. 

அண்மையில் சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்து, படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது சோழ நாட்டு புலி, குந்தவையின் மூத்த சகோதரனும்... ராஜ ராஜ சோழனின் சகோதரனுமான, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரமின்  மேக்கிங் டீசர் ஒன்றை வெளியிட்டு பிரமிக்க செய்துள்ளது. விக்ரம் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆதித்த கரிகாலன், போரில் ஆக்ரோஷமாக பேசும் வசனத்தை கர்ஜிக்கும் புலி போல் பேசி மிரளவைத்துள்ளார் விக்ரம். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: 3டி வெர்ஷனின் வெளியாகும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்'..!
 

ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தில், விக்ரம் சுந்தர சோழ ஆட்சியின் பட்டத்து இளவரசனாகவும், வடபடைகளின் தளபதியாகவும் நடித்துள்ளார். மேலும் குந்தவையாக த்ரிஷாவும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள். அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் உட்பட 9 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?
 

ஏற்கனவே பிரம்மாண்டத்தின் உச்சமாய், இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது விக்ரமின் மேக்கிங் வீடியோவும் வேற லெவலில் உள்ளது. படத்தை பார்க்க தூண்டும் அளவிற்கு காட்சிகள் உள்ளதாக கூறிவரும் ரசிகர்கள் இந்த மேக்கிங் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
 

click me!