PS-2 ரிலீஸ் சமயத்தில் பிறந்த இரண்டாவது குழந்தை... டபுள் சந்தோஷத்தில் பொன்னியின் செல்வன் நடிகர்

By Ganesh A  |  First Published Apr 10, 2023, 2:44 PM IST

அஜித்துடன் மங்காத்தா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அஸ்வின் கக்குமானு. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மங்காத்தா திரைப்படத்தில் போலீஸாக நடித்திருந்திருந்தார் அஸ்வின். இதுதவிர சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஜய் சேதுபதியின் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்தி உடன் பிரியாணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹீரோவாக நடித்த மேகா, ஜீரோ ஆகிய படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பாக மேகா படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்கிற ரீமேக் பாடலும், ஜீரோ படத்தில் அனிருத் பாடிய உயிரே பாடலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஆபாச வெப்சைட்டில் போட்டோ... பார்ன் ஸ்டார் என அழைத்து டார்ச்சர் பண்ணிய தந்தை - கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி

நடிகர் அஸ்வின் கக்குமானு கடைசியாக மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் நடிகர் கார்த்தியின் நண்பனாக சேந்தன் அமுதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவர் நடிப்பில் தற்போது பீட்சா 3 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஸ்வின் கக்குமானுவின் மனைவி சோனாலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சோனாலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஸ்வினுக்கு ஏற்கனவே அவிரா ரூபி என்கிற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 2-ந் தேதி அந்த ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அஸ்வின் - சோனாலி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... என்னப்பா ஹீரோயின் ஆம்பள மாதிரி இருக்கு..! கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யார் தெரியுமா?

click me!