பொன்னம்பலம் கேட்டவுடன் மருத்துவ உதவி செய்த நடிகர் அஜித்குமார்.
கோலிவுட் சினிமாவில் முக்கிய வில்லனாக நடித்து வரும் பொன்னம்பலம், ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பொன்னம்பலம் நடிகர் அஜித்துடன் அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் அப்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.
இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன் நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒருநாள் பட சூட்டிங்கிங் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஹீரோ அஜித்தை சந்தித்து ஒரு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார். அது என்னவென்றால் அவருடைய நண்பரின் மகனுக்கு இருதயத்தில் ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது.
அதை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது. அதற்காக பண உதவி செய்ய முடியுமா என்று அஜித்திடம் பொன்னம்பலம் கேட்டிருக்கிறார். அஜித், உடனே சம்பந்தப்பட்ட அந்த சிறுவனின் மருத்துவமனை பரிசோதனை அறிக்கை, மருத்துவமனை பில் போன்ற அனைத்தையும் கேட்டு வாங்கி பார்த்திருக்கிறார்.
அப்போது, திடீரென அடுத்த ஷாட் ரெடியானதால் அஜித் நடிப்பதற்கு சென்று விட்டாராம். எதுவுமே சொல்லாமல் அஜித் சென்று விட்டதால் மனவருத்தத்தில் இருந்த பொன்னம்பலம், அஜித் திரும்பி வரும் வரை காத்திருந்துள்ளார். அந்த ஷாட் முடிந்தவுடன் திரும்பி வந்த அஜித் வழக்கம்போல தன்னுடைய வேலையை தொடர்ந்தபடி இருந்திருக்கிறார்.
Dharsha Gupta : கடற்கரையில் கவர்ச்சி புயலாக மையம் கொண்ட தர்ஷா குப்தா-வின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ
அதனால் குழம்பிப்போன பொன்னம்பலம், தான் சொன்னதை அஜித் மறந்து விட்டாரோ என்று நினைத்து, அஜித்திடம் மீண்டும் மருத்துவ சிகிச்சை குறித்து ஞாபகப்படுத்தி இருக்கிறார். அதற்கு அஜித் சொன்னதைக் கேட்டு பொன்னம்பலம் திகைத்து நின்றுவிட்டாராம். அஜித் சொன்னது, நீங்க என்னிடம் கேட்ட போதே நான், மருத்துவமனை பில் அனைத்தையும் கட்டி விட்டேன். நீங்கள் இன்னும் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என கேட்டாராம்.
இதை எதிர்பார்க்காத நடிகர் பொன்னம்பலம் அதிர்ச்சியில் திகைத்து போயிருக்கிறார். இதுதான் நடிகர் அஜித்தின் குணம். யாருக்காவது உதவிதேவை என்று கேள்விப்பட்டால் உடனே அதை செய்துவிடுவார். அந்த உதவியை அவர் என்றுவே வெளியே சொல்லி தம்பட்டம் அடித்துக்கொள்ளவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.