
புதுச்சேரி மாநில விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் மணிகண்டன். கடந்த 4ம் தேதி மணிகண்டனை அடையாளம் தெரியாத கும்பல் நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனுக்கு போட்டியாக, உறவினரான ராஜசேகர் என்பவர் ஆட்டுப்பட்டி பகுதியில் ஒரு ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் எற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் மீனா... படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்று வந்த மணிகண்டன், மன்றங்களை இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால், அன்று பைக்கில் திரும்பிய மணிகண்டனை 3 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்து வெட்டி சாய்த்துள்ளனர். இதுதொடர்பாக ராஜசேகரை கைது செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அச்சு அசலாக சமந்தா போல் மாறிய அதுல்யா... கவர்ச்சி உடையில் கச்சிதமாக கொடுத்த போஸ்கள்...!
அதில் ரசிகர் மன்ற தலைவர் பதவியை யார் வைத்துக்கொள்வது என்பதில் எனக்கும் மணிகண்டனுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அதனால் நானும் எனது 3 நண்பர்களும் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக்கொன்றோம் என ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ராஜசேகர் உட்பட 5 பேரை கைது செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். ரசிகர் மன்ற தலைவர் பதவிக்காக இளைஜர் வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.