சமூகமே சாக்கடை ஆகிடுச்சோ?...ஆபாச படமான “இரண்டாம் குத்து” டீசர் விவகாரத்தில் கொந்தளிக்க வைத்த சம்பவம்...!

Published : Oct 08, 2020, 03:07 PM ISTUpdated : Oct 08, 2020, 03:12 PM IST
சமூகமே சாக்கடை ஆகிடுச்சோ?...ஆபாச படமான  “இரண்டாம் குத்து” டீசர் விவகாரத்தில் கொந்தளிக்க வைத்த சம்பவம்...!

சுருக்கம்

அடல்ட் காமெடி மற்றும் அடல்ட் ஹாரர் படங்களான ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், மூன்றாவதாக அவரே இயக்கி, அவரே நடித்துள்ள திரைப்படம் 'இரண்டாம் குத்து'. இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.  

அடல்ட் காமெடி மற்றும் அடல்ட் ஹாரர் படங்களான ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், மூன்றாவதாக அவரே இயக்கி, அவரே நடித்துள்ள திரைப்படம் 'இரண்டாம் குத்து'. இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சி போல் போஸ் கொடுத்த “பாண்டியன் ஸ்டார்” முல்லை..! புகைப்பட தொகுப்பு..!
 

இந்த படத்தில் புதுமுக நடிகை, அக்ரிதி சிங், மீனெல் ஷா, என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் டேனியல், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகியது.

சகித்து கொள்ள முடியாத அளவிற்கு ஆபாச வார்த்தைகள், மற்றும் காட்சிகள் இந்த படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளது.  விஜய், விஜய் சேதுபதியின் குட்டிக் கதைகளை ஒப்பிட்டு மொட்டை ராஜேந்திரன், அடல்ட் காமெடி காதுகளை கூச வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: அசர வைக்கும் சமந்தாவின் ஜிம் ஒர்கவுட்..! திருமணத்திற்கு பிறகும் இப்படியா? அதிகம் பார்த்திடாத போட்டோஸ்..!
 

நாயகிகளை விடாமல் துரத்தி, இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்துள்ளார் இயக்குனர். மேலும் லிப் கிஸ், பெட் சீன், ஏ காமெடி, ஆபாச காட்சிகள் என எதற்கும் பஞ்சம் வைக்காமல், இருட்டு அறையை மிஞ்சிய படி படத்தை இயக்கி, அதில் நடித்துள்ளார் சந்தோஷ்.

படத்தின் போஸ்டருக்கு எப்படி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்களோ அதே போல் இந்த படத்தின் டீஸருக்கும் பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் பாரதி ராஜா இந்த படத்தை இயக்கியவர் வீட்டில் பெண்களே இல்லையா என விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: காமெடி நடிகருக்கு ஜோடியாக லட்சுமி மேனனா? வெளியான உண்மை..!
 

இப்படி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்த டீசரை 12 மணிநேரத்தில் சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். நல்லதை சொன்னால் நாலு பேர் கூட காது கொடுத்து கேர்க்குறது இல்ல, ஆனால் ஆபாசத்தின் உச்சமான இந்த டீசருக்கு இப்படி ஒரு வரவேற்பு...? இப்படிப்பட்ட வக்கிரமான படத்தின் டீசரை இவ்வளவு பேர் பார்த்துள்ளது சமூகத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அந்த வக்கிரத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் பலரும் வந்துவிட்டனரோ? என்ற அச்சத்தையும் உருவாக்குகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?