
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்து... யாஷிகா ஆனந்த் படுகாயம்... தோழி மரணம்?
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த், மிகவும் கிரிட்டிக்கல் கன்டிஷனில் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “சார்பட்டா பரம்பரை” வேம்புலி வேடத்தில் நடித்தவரின் மனைவி யார் தெரியுமா?... வைரலாகும் க்யூட் போட்டோ!
இந்த விபத்து குறித்து தகவல் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் யாஷிகா ஆனந்த் மீது அதிக வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன? எதற்காக யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்தார்? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதுவரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.