“அப்படி என்னடா கோவம் என் மேல”... மைனா நந்தினி கணவர் செய்த காரியத்தால் கடுப்பான அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 24, 2021, 09:10 PM IST
“அப்படி என்னடா கோவம் என் மேல”... மைனா நந்தினி கணவர் செய்த காரியத்தால் கடுப்பான அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ!

சுருக்கம்

சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, மைனா நந்தியின் கணவர் யோகேஸ்வரன் உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா, அதன் பின்னர் குக் வித் கோமாளி முதல் சீசனில் தொகுப்பாளராகவும் கலக்கினார். அத்தோடு நில்லாமல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த முறை விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த பல பிரபலங்களும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா சேர்ந்து அடித்த கூத்து சோசியல் மீடியாவி கலவையான விமர்சனங்களை கொண்டு வந்தது. 


அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ, மழையை பார்த்து அப்பா அக்கா என அழுத வீடியோ உட்பட பல விஷயங்களை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிஷா, டான்ஸுல் வேற லெவலுக்கு கவர்ந்து வருகிறார். 

சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, மைனா நந்தியின் கணவர் யோகேஸ்வரன் உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘உன்ன சும்மா நடிக்க தானடா சொன்னேன் இப்படி அடிக்க சொல்லலையே டா, அப்படி என்னடா கோவம் என் மேல’ என்ற பதிவோடு பருத்தி வீரன் பட டைலாக்கை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்