
பாலிவுட் திரையுலகில், படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்த வழக்கில், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான, ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடிக்கப்பட்ட நிலையில், இவர் குறித்து அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்களை நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை சகாரிக்கா சோனா... ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடித்து காட்ட சொன்னதாவும், கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் ராஜ் குந்த்ரா, பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுப்பது உண்மை என கூறியுள்ளார்.
ராஜ் குந்தார் பற்றி உண்மையை வெளிப்படுத்தியதால், தன்னை மிரட்டும் தொனியில், கொலை மிரட்டல்கள் மற்றும் மெசேஜ் வருவதாக மும்பை போலீசாரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அடுத்தடுத்து சில நடிகைகள் ராஜ் குந்த்ரா தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளதாக வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில், இவரது புகாரும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் அவர் வருங்காலத்தில், நேரடியாக ஆபாச படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.