
'அவன் இவன்' படத்திற்கு பின், ஆர்யா - விஷால் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'எனிமி' படத்தின் டீசர் வெளியாகி... நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாலை 'எனிமி' படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி தற்போது விஷால் மற்றும் ஆர்யா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் டீசர் வெளியாகியுள்ளது. ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டியுள்ளார். மேலும் உண்மையான எதிரி யார் தெரியுமா? என்பது போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 'எனிமி' படத்தின் டீசர் இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.