டான்சிங் ரோஸாக மிரட்டி இருக்கும் புது முக நடிகர்...!! பா.ரஞ்சித் அபாரம்..!!

By manimegalai aFirst Published Jul 24, 2021, 5:43 PM IST
Highlights

இந்த படத்தில் மற்றவர்களை விட, பாக்ஸிங் விளையாட்டை சற்று வித்தியாசமாக டான்ஸ் மூமென்ட் போலவே செய்து அசத்தி இருப்பர் ஷபீர் கல்லரக்கல். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளதால், சமூக வலைத்தளத்தில் இவரை பற்றிய தேடலும் அதிகமாகியுள்ளது... 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் கனவு படமான, 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம்  ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் மற்றவர்களை விட, பாக்ஸிங் விளையாட்டை சற்று வித்தியாசமாக டான்ஸ் மூமென்ட் போலவே செய்து அசத்தி இருப்பர் ஷபீர் கல்லரக்கல். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளதால், சமூக வலைத்தளத்தில் இவரை பற்றிய தேடலும் அதிகமாகியுள்ளது... 

இயக்குனர் பா.ரஞ்சித்த முதல் முறையாக வடசென்னையில் 1970 களில் பிரபலமாக இருந்த பாக்சிங் விளையாட்டை, அந்த கால கட்டத்திற்கு ஏற்ற போல் ஒரு பீரியட் பிலிம்மாக இயக்கியுள்ளார்.  ஆர்யா கதாநாயகனாக தன்னுடைய திறமையான நடிப்பையும்,  இந்த படத்திற்காக போட்ட முழு உழைப்பிற்கும் கை மேல் பலன் கிடைத்திருப்பது போன்று 'சார்பட்டா' பரம்பரை படம், சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும் இவரை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருமே இப்படத்திற்காக கடின உழைப்பை செலுத்தியுள்ளனர் என்பதும் தெரிகிறது. 

அதிலும் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம்... ரிங்கில் ஏறி ஒரே ஒரு சண்டை போட்டாலும், ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். இவரை வைத்தே இந்த படத்தை கொண்டு சென்றிருக்கலாம் என்றும், இவரது பாக்சிங் காட்சிகள் அதிகப்படுத்தி இருக்கலாம் என்றும்  ரசிகர்கள்  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

சரி யார் இந்த டான்சிங் ரோஸ்? 

டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் உண்மையான பெயர், ஷபீர் கல்லரக்கல். சென்னையை சேர்ந்த இவர், பலரும் நினைப்பது போல் பாக்ஸிங் விளையாட்டு வீரர் இல்லை. அவர் ஒரு நாடக பயிற்சியாளர். இதற்க்கு முன் இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அடங்க மறு, பேட்ட, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்துள்ளது 'சார்பட்டா பரம்பரை' படம் தான்.

திரைத்துறைக்காக இவர் கற்று வைத்துள்ள பயிற்சிகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக் கலைகள், சிலம்பம், கிக் பாக்சிங், மற்றும் காலடி குத்து வரிசை ஆகியவற்றை கற்று கை தேர்ந்தவர். இவர் அனைத்தும் இவரை இந்த டான்சிங் ரோல் கதாபாத்திரமாகவே மாற்றி உள்ளது. இவரது கதாபாத்திரம் இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர், பிரின்ஸ் நசீம் ஹமீத் என்பவரை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கபிலனாக வரும் ஆர்யாவுக்கு பிரபல குத்துச் சண்டை வீரரான முகமது அலியின் ஸ்டைலும், வேம்புலியாக வரும் ஜான் கொகேனுக்கு மைக் டைசன் ஸ்டைலும் ரெபரன்ஸாக பயன்படுத்து உள்ளார்களாம் படக்குழுவினர். 

ஆனால் கபிலன்- வேம்புலி என இருவரும் வெறித்தனமாக தங்களது பாக்சிங் திறமைகளை வெளிக்காட்டி இருந்தாலும், குதூகல நடன அசைவாலும், சும்மா காற்றில் பறப்பது போல்... உடலை வளைத்து, நெளித்து அபாரமாக ஷபீரை ஒரு பாக்ஸராக நடிக்க வைத்துள்ளார் பா.ரஞ்சித். அதே நேரத்தில் பல வருடங்கள் கழித்து பிரபல இங்கிலாந்து குத்து சண்டை வீரர் நசீம் ஹமீத்தின் நினைவை ஏற்படுத்தியுள்ளது. 


 

click me!