
பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நேற்று யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த் சென்று கொண்டிருந்த கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.