பிரதமர் மோடி முதல் சூப்பர்ஸ்டார்ஸ் வரை... சுரேஷ் கோபி மகள் திருமணத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

By Ganesh A  |  First Published Jan 17, 2024, 9:55 AM IST

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி மற்றும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அஜித்துடன் தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் தன்னுடையை முத்திரையை பதித்துள்ளார். தற்போது 65 வயதிலும் செம்ம பிசியாக நடித்து வருகிறார் சுரேஷ் கோபி.

நடிகர் சுரேஷ் கோபி அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுரேஷ் கோபி. இவருக்கு பாக்யா சுரேஷ் என்கிற மகளும் உள்ளார். அவருக்கு இன்று கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை.. விரைவில் திருமணம்?

கேரளாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள குருவாயூர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த கையோடு, சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திலும் கலந்துகொண்டார். இதையடுத்து மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் மோடி. பிரதமர் மட்டுமின்றி ஏராளமான திரைப்பிரபலங்களும் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரும் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் ஒன்றாக வந்து கலந்துகொண்டனர். அதேபோல் நடிகை குஷ்பு, நடிகர் திலீப் போன்ற பிரபலங்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மோடி வருகையால் குருவாயூர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Suresh Gopi @ Guruvayur Temple pic.twitter.com/X3fVxgedtM

— Ramith :: My :: india.🇮🇳🇮🇳 (@Ramith18)

இதையும் படியுங்கள்... அயலான், கேப்டன் மில்லரை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக மிரட்டும் ஹனுமன் பட வசூல் நிலவரம்

click me!