
ரஜினியின் ‘பேட்ட’யும் அஜீத்தின் ‘விஸ்வாசமும் ஒரே தேதியில் வெளியாவதை ஒட்டி நடக்கும் அட்டக்கத்தி சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில் இன்று வெளியான ‘பேட்ட’ ட்ரெயிலரில் வசனங்கள் ஸ்ட்ரெயிட்டாக அஜீத்தின் விஸ்வாசம்’ படத்தைத் தாக்குவதாக சில நாரதர்கள் கொளுத்திப்போட ஆரம்பித்துள்ளனர்.
அஜீத்தின் படம் குடும்ப செண்டிமெண்ட் படம்.அதில் அவர் நயன் தாராவைத் திருமணம் செய்து குழந்தை,குட்டி செண்டிமெண்டோடு இருக்கிறார். ரஜினியின் ட்ரெயிலரில் வரும் வசனத்திலோ, ‘குழந்தை குட்டி செண்டிமெண்டோட இருக்கிறவன் ஒழுங்கா ஓடிப்போயிடு, கொலைவெறி காண்டுல இருக்கேன்’ என்று டயலாக் வருகிறது.
இது நேரடியாக குழந்தை,குட்டி செண்டிமெண்ட் படமான விஸ்வாசத்தைக் குறிவைத்து எழுதப்பட்டது என்ற செய்தி தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இது போன்ற எத்தனை கொடுமைகளைச் சந்திக்கவேண்டிவருமோ யாமறியோம் பராபரமே.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.