கூட்டமா மாஸ் காட்ட வரும் பேட்ட ரஜினி... ஒத்த ஆளா கெத்தா நிற்கும் தல அஜித்!!

Published : Dec 28, 2018, 12:15 PM IST
கூட்டமா மாஸ் காட்ட வரும் பேட்ட ரஜினி... ஒத்த ஆளா கெத்தா நிற்கும் தல அஜித்!!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா, 2.0 இந்த மூன்று படங்கள் அளவிற்கு அதிகமாக விளம்பரம் செய்தும், வசூல் ரீதியாக பிளாப் ஆனது. போட்ட காசை எடுக்கவே நாக்கு தள்ளியது. 

ரஜினியின் முந்தைய பட வியாபாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆன கார்த்தி சுப்புராஜ் ரஜினியை வைத்து  மல்டி ஸ்டாரர் படத்தை எடுக்க முயற்சித்தார்.  

இதன் காரணமாகவே தற்போது  டிரெண்டிங்கில் உள்ள விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், த்ரிஷா முன்னால் கனவுக்கன்னி சிம்ரன், இயக்குனர் மகேந்திரன் , துள்ளல் இசைக்கு அனிருத், படத்தை பிரமாண்டமாகவும் எடுக்கவும், அதை உலகம் முழுவதும் மார்க்கெட் செய்யவும் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான சன் பிக்சர்ஸ் என ஒரு பெரும் கூட்டத்தை வைத்து பேட்ட  படத்தை எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பேட்ட படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் புரமோஷனை தொடங்கிய  சன் பிக்சர்ஸ்  சற்று முன்பு டிரெய்லர்  ரிலீஸ் செய்தது.

பேட்ட படத்திற்கு போட்டி என்று சொல்வதை விட, அஜித்தின் விஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட படம் வெளியாகிறதென்றே சொல்லலாம்,  விவேகம் படத்தை அடுத்து  அஜித் - தனது ஆஸ்தான இயக்குனரான சிவாவோடு நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தின் மூலம் இணைந்துள்ள இந்த படம் தொங்கும் போதே பொங்கல் வெளியீடு என்று சொல்லியே களம் இறங்கினர் ஆனால் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள பேட்ட சோலோவாக வரும் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக வர இருக்கிறது.

பாடல் டீசர், டிரெய்லர் என ஜெட் வேகத்தில் பிரமோஷன் செய்து வருகிறது பேட்ட படக்குழு. ஆனால் விஸ்வாசம் டீம் மோஷன் போஸ்டர், பாடல்கள் என ரசிகர்களிடம் டிரெண்ட் செய்ய கொடுத்துள்ளது.  வழக்கமாக அஜித் படத்தில்  நடிப்பது மட்டும் தான். எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவே மாட்டார். 

இப்படி இருக்கையில், மல்டி ஸ்டாரர், சன்பிக்சர்ஸ் என்ற படைபலத்தோடு கூட்டமாக வரும் ரஜினியை, ஒத்த ஆளாக கெத்தாக களம் இறங்கும் அஜித் எப்படி சமாளிப்பார். வரும் 10 ஆம் தேதிவரை பொறுத்திருந்து தான் பார்க்கணும்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?