’ரஜினி இன்னும் சின்னப்பையன் மாதிரியேதான் இருக்கிறாராம்’... ’பேட்ட’ ட்ரெயிலர் ஹைலைட்ஸ்...

Published : Dec 28, 2018, 11:49 AM IST
’ரஜினி இன்னும் சின்னப்பையன் மாதிரியேதான் இருக்கிறாராம்’... ’பேட்ட’ ட்ரெயிலர் ஹைலைட்ஸ்...

சுருக்கம்

ரஜினிக்கு வயசாகி விட்டது என்ற கமெண்ட் வந்து விடக்கூடாது என்பதற்கு ஒரு கல்லூரி மாணவியை விட்டு உஷாராக ‘இன்னும் சின்னப்பையன் மாதிரியே இருக்கீங்க’ என்கிறார்.

சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ ட்ரெயிலரை அது வெளியான ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே 5 லட்சத்துகும் மேற்பட்டோர் கண்டு களித்திருக்கின்றனர்.

ட்ரெயிலரைப் பார்க்கும்போது செம கலாட்டாவான மசாலாப் படத்துக்கான அத்தனை அறிகுறிகளும் இருக்கின்றன. ரஜினிக்கு வயசாகி விட்டது என்ற கமெண்ட் வந்து விடக்கூடாது என்பதற்கு ஒரு கல்லூரி மாணவியை விட்டு உஷாராக ‘இன்னும் சின்னப்பையன் மாதிரியே இருக்கீங்க’ என்கிறார்.

விஜய் சேதுபதி ஒரு பக்கம் சிரிக்க, மற்றொரு பக்கம் ரஜினி தனது பிராண்ட் ஸ்டலில்  சிரிக்க என இருவருக்குமான இந்த சிரிப்பு காட்சி சிறப்பு. ஓரிரு நொடிகள் மட்டுமே வந்தாலும் நவாசுதின் சித்திக்கின் தோற்றம் வியக்க வைக்கிறது.

 விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தொடர்பான குழப்பம் ட்ரெஇயிலர் பார்த்த பிறகு இன்னும் அதிகரித்திருக்கிறது.  அவரது கேரக்டர் சம்பந்தமாக  நிச்சயமாக படத்தில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது போல. பாபி சிம்ஹா கல்லூரி மாணவனாக வருகிறார். அவருக்கும் நிறைய ஸ்கோப் இருப்பதாகவே தெரிகிறது. 

த்ரிஷாவுக்கும், சிம்ரனுக்கும் ட்ரெயிலர் ஜஸ்ட் தலா ஒரே ஷாட்தான். இருவருக்கும் படத்தில் காட்சிகள் குறைவாகவே இருப்பதை அது உறுதி செய்கிறது.

அனிருத்தின் இசை டிரைலரின் டெம்போவை கூட்டுகிறது. தன்னை ரஜினி ரசிகன் என்று கூறிக்கொண்டுவரும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இந்த ட்ரெயிலரைப் பொறுத்தவரை ஒரு ரசிகராக நிச்சயமாக வெற்றிகண்டிருக்கிறார். ஆனால் இயக்குநராக என்னவாகிறார் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?