எத்தனை ஹிட் கொடுத்து என்ன பிரயோஜனம்... தலைவி பார்வதிக்கே ஒரு வருஷமா படம் இல்லையாம்!

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 12:58 PM IST
Highlights

’MeToo' விவகாரம் சூடுபிடித்தபிறகு, அதற்காக போராடும் நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பளிக்காமல் திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். அத்தோடு வலைதளங்கள் மூலமாக கொலைமிரட்டல் வரை வருகிறது என்கிறார்.

’MeToo' விவகாரம் சூடுபிடித்தபிறகு, அதற்காக போராடும் நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பளிக்காமல் திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். அத்தோடு வலைதளங்கள் மூலமாக கொலைமிரட்டல் வரை வருகிறது என்கிறார். முன்னணி மலையாள நடிகைகளில் ஒருவரான பார்வதி. மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் 'பூ’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். 

மலையாளத்தில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ‘மரியான்’,சென்னையில் ஒரு நாள்’, ’உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மலையாள நடிகை பாவனாவைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார். இதையொட்டி மலையாள ஹீரோக்கள் இவரைத்திட்டமிட்டு புறக்கணிக்க ஆரம்பித்தனர். 

இதுகுறித்து ஓப்பனாகப் பேசிய பார்வதி, “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்குக் கூட படவாய்ப்புகள் அளிக்கின்றனர். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. இங்கு கதாநாயகர்களை கடவுளாகப் பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது. 

அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். தினமும் அச்சத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

click me!