குழந்தைகள் சேட்டை செய்தால் இந்த படத்தை போட்டு தான் பயமுறுத்துவாராம் ஜோதிகா!

Published : Oct 22, 2018, 12:35 PM IST
குழந்தைகள் சேட்டை செய்தால் இந்த படத்தை போட்டு தான் பயமுறுத்துவாராம் ஜோதிகா!

சுருக்கம்

தன்னுடைய குழந்தைகள் அதிகம் சேட்டை செய்யும் போது ஜோதிகா தான் நடித்த சந்திரமுகி திரைப்படத்தினை தான் போட்டு காட்டி பயமுறுத்துவேன் என்றும் அந்த நிகழ்ச்சியின் போது ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என மீடியா வெளிச்சத்தில் விலகி இருந்த ஜோதிகா, சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மீடியாவில் தன்னுடைய ரீ எண்ட்ரீயை உறுதி செய்திருந்தார். அதன் பிறகு அவர் ரீ எண்ட்ரீ கொடுத்த 36 வயதினிலே படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் கூட மணிரத்தினம் இயக்கத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தினில் ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை அசத்தி இருந்தது.

 

திருமணத்திற்கு பிறகு செலக்டிவான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா தொடர்ந்து ஒரு லிமிட்டடான கதாப்பாத்திரத்தினையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்திருக்கும் காற்றின் மொழி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் ஜோதிகா.  அந்த நிகழ்ச்சியின் போது பேசிய ஜோதிகாவிடம் “ நீங்களும் சூர்யாவும் இணைந்து நடித்த திரைப்படத்தினை உங்கள் குழந்தைகள் பார்த்திருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

அந்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா இது வரை அப்படி ஒரு படத்தினை அவர்கள் பார்க்கவில்லை. ஒருவேளை அவர்களுக்கு எங்கள் படத்தை காட்ட விரும்பினால் என் தேர்வு “காக்க காக்க” படம் தான் என்று தெரிவித்திருக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிலான ஹிட் கொடுத்த படம் இது என்பது கூறிப்பிடத்தக்கது. 

அதே சமயம் தன்னுடைய குழந்தைகள் அதிகம் சேட்டை செய்யும் போது ஜோதிகா தான் நடித்த சந்திரமுகி திரைப்படத்தினை தான் போட்டு காட்டி பயமுறுத்துவேன் என்றும் அந்த நிகழ்ச்சியின் போது ஜோதிகா தெரிவித்திருக்கிறார். கோலிவுட் வட்டாரத்தினையே மிரட்டிய சந்திரமுகி ஜோதிகாவை பார்த்து , அவரின் குழந்தைகள் மட்டுமென்ன பயப்படாமலா இருப்பார்கள்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!