உன்னை ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன்... பெண்புகைப்படக் கலைஞருடன் விளையாடிய தியாகராஜன்!

By vinoth kumar  |  First Published Oct 22, 2018, 11:44 AM IST

கைப்படக் கலைஞர் பிரித்திகா மேனனைத் தொடர்ந்து இன்னும் சில பெண்கள் MeToo' வில் தன்னைப்பிரித்து மேயத் தயாராக இருக்கிறார்கள் என்கிற தகவலால் பெரிதும் கலக்கமடைந்திருக்கிறார் நட்கர் பிரசாந்தின் தந்தையும், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.


புகைப்படக் கலைஞர் பிரித்திகா மேனனைத் தொடர்ந்து இன்னும் சில பெண்கள் MeToo' வில் தன்னைப்பிரித்து மேயத் தயாராக இருக்கிறார்கள் என்கிற தகவலால் பெரிதும் கலக்கமடைந்திருக்கிறார் நட்கர் பிரசாந்தின் தந்தையும், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். 

MeToo' வுல இல்லாதவங்க பேரை மட்டும் சொல்லுங்கப்பா. அந்த லிஸ்ட் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு’ என்று சொல்லுமளவுக்கு பாலியல் புகார்கள் சினிமா பிரபலங்கள் மீது குவிந்துவருகின்றன. இதில் நடிகர் அர்ஜூன் பெயருக்கு அடுத்தபடியாக ‘மம்பட்டியான்’ தியாகராஜன் கவனத்துக்கு வந்திருக்கிறார். பொன்னர் சங்கர்’ படத்தில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியபோது, ஜலதோஷத்துக்கு பிராந்தி தருகிறேன் என்கிற பெயரில் தியகராஜன் தனக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் செக்ஸ் தொல்லைகொடுத்து துன்புறுத்தியதாகவும். 

Tap to resize

Latest Videos

உன்னை அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என்று சொல்லி அல்வா கொடுத்துள்ளார். அதனால் சம்பளம் எதுவும் வாங்காமல் படப்பிடிப்பை விட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு நில்லாமல் தன்னைப்போலவே தியாகராஜனால் பாதிக்கப்பட்ட சிலரை MeToo'வில் கோர்க்க இவர் முயற்சித்து வருவதாக தியாகராஜனுக்கு தகவல் கிடைக்கவே, பிரித்திகா மேனனை தேடிச்சலித்த தியாகராஜன், ‘என் மீது புகார் கொடுக்கும் பிரித்திகா மேனனை எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 

எனவே இன்று மாலை 6 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்து என் தரப்பை விளக்கவிருக்கிறேன்’ என்கிறார். 6 மணிக்குள்ல இன்னும் ரெண்டுமூனுபேர் கிளம்பி வந்தாலும் வருவாங்க. அவங்களும் சேர்த்து ரெடியாயிட்டு வாங்க மம்பட்டியான்.

click me!