
'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி... பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமீர் தன்னிலை விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அமீருக்கு ஆதரவாக, இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார், உள்ளிட்ட பலர் தங்களின் கருத்துக்களை கூறிய நிலையில் தற்போது இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது," ஓயாது அலைகள்", தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி....
"அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக - இந்த கடிதம்!!
இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது - நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி - அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால், அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல - முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள் - எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட படைப்பாளி, என்று உலகறிய செய்திருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
‘’மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன்‘’ - இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை - இன்னொரு பாரதிராஜா - வாக ஏற்றுக்கொள்ள எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி
உண்மை என்று ஏதோதோ பேசினீர்களே, இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிகட்டா?
ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே - அதை பற்றி பேசுவோமா ? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?
உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு - பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு - எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ - அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை - அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து - இந்த பிரச்சனையை - நீங்கள் முடித்து கொள்வதுதான், அதுவரை...! ஓயாது அலைகள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.