
சென்னை ஆழ்வேர்பேட்டை சார்மினார் சாலையில் ‘கிரவுன் பிளாசா ஹோட்டல்’ என்ற பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளது. பார்க் ஷெர்ட்டன் என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் 38 ஆண்டுகள் பழமையானது. மேலும் சென்னை நகரின் முக்கிய கட்டிடங்களில் ஒன்றான இந்த ஹோட்டலில் 287 அறைகள் உள்ளன. ”கிரவுன் பிளாசா” விஐபிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் ஐபிஎல் வீரர்களுக்கான தங்குமிடமாக இது இருந்தது.
இந்த ஹோட்டல் ஆரம்பத்தில் தொழிலதிபர் டிடி வாசுவால் அடையார் கேட் ஹோட்டலாக விளம்பரப்படுத்தப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டில், இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் குழுமம் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் இதுஹோட்டல் கிரவுன் பிளாசா சென்னை அடையார் பூங்கா என மறுபெயரிடப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கிரவுன் பிளாசா ஹோட்டல் வரும் 20ம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஆடம்பர சொகுசு அப்பார்ட்மெண்ட் வர உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், அந்த இடத்தில் 130 அதிநவீன சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுடன் இரட்டைக் கோபுரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 130 ஆடம்பர வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.30,000க்கு விற்க கட்டுமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வீடுகள் கட்டப்பட்ட உடன் ரூ.15 கோடி முதல் ரூ.21 கோடி வரை வீடுகளின் விலையை நிர்ணயிக்க பாஷ்யம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து தளங்களின் மொத்த பரப்பளவு குறியீட்டுக்கான தமிழக அரசின் அனுமதிக்காக பாஷ்யம் காத்திருக்கிறது. இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஒரு சதுர அடி இடத்தை ரூ50,000க்கு விற்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இந்த நிலையில் இந்த ஆடம்பர அதிநவீன அப்பார்ட்மெண்ட் வர உள்ள இடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீடு வாங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர்கள் அட்லீ, நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு ஆடம்பர வீடுகளை வாங்கப்போகிறார்களாம். இவர்களை தொடர்ந்து வேறு சில பிரபலங்களும் இங்கு வீடு வாங்கப்போவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.