ஷீத்தலுக்காக 1 லட்சம்.. ஹோட்டலில் உல்லாசம்.. நீயெல்லாம் என்னை கேள்வி கேட்கலாமா? பப்லுவை விளாசும் பயில்வான்!

Ansgar R |  
Published : Dec 14, 2023, 09:55 AM IST
ஷீத்தலுக்காக 1 லட்சம்.. ஹோட்டலில் உல்லாசம்.. நீயெல்லாம் என்னை கேள்வி கேட்கலாமா? பப்லுவை விளாசும் பயில்வான்!

சுருக்கம்

Bayilvan Ranganathan : பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தான் காதலித்து வந்த ஷீத்தல் என்கின்ற பெண்ணை தற்போது பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசி உள்ளார் பிரபல நடிகரும் சினிமா விமர்சிகரமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள்.

பிரபல நடிகர் பப்லு அவர்கள் சிறு வயது முதலிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது அவருக்கு சினிமா துறையில் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியுள்ளது என்றே கூறலாம் அந்த அளவிற்கு இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க துவங்கியுள்ளார். நடிகர் பப்லு.

அவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்கின்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது, ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை பப்லு விவாகரத்து செய்தார். அதன் பிறகு ஷீத்தல் என்கின்ற பெண்ணுடன் அவர் லிவிங் உறவில் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் அவரையும் சில தினங்களுக்கு முன்பாக பிரிந்து விட்டதாக தற்பொழுது தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பப்லு விவகாரம் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருந்த பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அவர்களை எதிர்த்து திரு. பப்லு அவர்கள் சில கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தோன்றி பேசிய பயில்வான் ரங்கநாதன் அவர்கள், பப்லுவை கடுமையாக சாடியுள்ளார். 

"இதற்கு முன்னதாக பீனா என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட பப்லு இயல்பிலேயே முன்கோபக்கர். அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் அது விவாகரத்து வரை சென்றது. இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீனாவை பிரிந்த பப்லு, ஒரு நிகழ்ச்சியில் தான் ஷீத்தலை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டு இருவரும் லிவிங் ரிலேஷனில் இருந்து வந்தனர்". 

"57 வயதில் அந்த பெண்ணோடு அவர் வாழ்ந்து வந்தார், அந்த அளவிற்கு உனக்கு பெண் மோகம் கேட்கிறது, ஒரு முறை ஷீத்தலுக்காக ஒரு தனியார் ஹோட்டலில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பெரிய ரூம் ஒன்றை புக் செய்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்" என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் ரங்கநாதன். மேலும் நடிகர் பப்லு தன்னுடைய நடிப்பின் மீது குறை கூறுகிறார், 71 வயதில் நான் இன்றளவும் நன்றாகத்தான் நடித்த வருகிரேன் அதைப்பற்றி அவர் எனக்கு கற்றுத் தர தேவையில்லை என்று கூறியுள்ளார். 

57 வயதில் உனக்கு பெண்கள் மீது மோகம் கேட்கிறதா? நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா? கோவப்பட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், கோவப்பட்டவனுக்கு வேதனை தான் வந்து சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.    

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!