தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார் நடிகரின் வாழ்க்கையை படமாக்க துடிக்கும் பார்த்திபன்

By Ganesh A  |  First Published Mar 1, 2023, 1:52 PM IST

தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையை படமாக்க தான் ஆசைப்பட்டதாக இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்த பார்த்திபன், கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த புதியபாதை திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். முதல் படத்திலேயே முத்திரை படைத்த பார்த்திபன் அப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனரான இவர் நடிகராகவும் பல்வேறு படங்களில் முத்திரை பதித்துள்ளார்.

புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் பார்த்திபன், கடந்த 2019-ம் ஆண்டு ஒத்த செருப்பு என்கிற படத்தின் மூலம் இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தினார். அந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்துற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக அவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன் 2' புரோமோஷனை துவங்கிய லைகா..! வெளியானது புதிய வீடியோ..!

இப்படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தார். அதுமட்டுமின்றி நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்றும் இதனை புரமோட் செய்து வந்தார் பார்த்திபன். இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக இதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே டுவிட்டர் மோதல் நடைபெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையை படமாக்க தான் ஆசைப்பட்டதாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” என எம்கே தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை படமாக்க ஆசைப்பட்டது குறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இன்று நடிகர் தியாகராஜ பாகவதரின் 114-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

First super star of tamilnadu!!!!!!!
புகழின் உச்சம் கண்டவர்.மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர்.பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர்.Last reel மிக மோசமான சோகம்!பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன். pic.twitter.com/2pfve2mqYM

— Radhakrishnan Parthiban (@rparthiepan)

இதையும் படியுங்கள்... சுடசுட ஆந்திரா தோசை... இன்னைக்கு ஒரு புடி...! வைரலாகும் கில்லி நடிகரின் ரோட்டுக்கடை வீடியோ

click me!