முதன்முறையாக பா.இரஞ்சித் படத்திற்கு ஏ சான்றிதழ்... நட்சத்திரம் நகர்கிறது படத்துல அப்படி என்ன இருக்கு?

Published : Aug 27, 2022, 01:52 PM IST
முதன்முறையாக பா.இரஞ்சித் படத்திற்கு ஏ சான்றிதழ்... நட்சத்திரம் நகர்கிறது படத்துல அப்படி என்ன இருக்கு?

சுருக்கம்

natchathiram nagargirathu : பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் படமான நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில், அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பா.இரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

இவர் இயக்கத்தில் தற்போது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் உருவாகி உள்ளது. காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் வில்லி அர்ச்சனா..! அவருக்கு பதில் நடிக்க போவது யார் தெரியுமா?

இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மூலம் இதில் லெஸ்பியன் காதல் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் காதலைப் பற்றியும் காட்டியுள்ள காட்சிகள் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படத்தில் எல்லைமீறிய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாம். பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் இந்த படம் மட்டும் தான் ஏ சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகை பிரியா பவானி சங்கருக்கு செம்ம தில்லு! ஸ்விட்சர்லாந்தில் காதலனுடன் ஸ்கைடைவிங் செய்து அசத்திய வீடியோ வைரல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!